எப்பொழுதெல்லாம் ஒரு வல்லரசு நாட்டுக்கு போட்டியாக இன்னொரு நாடு ஏறுமுகமாக வளர்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவ்விரு நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன. இது மனிதனின் அடிப்படை உளவியல் என்கிறார் 2500 வருடங்களுக்கு முன்தோன்றிய புகழ்பெற்ற முதல் வரலாற்றாசிரியர் துசிடிடிசு. கடந்த 500 வருட வரலாற்றில் இதுபோன்ற நிலை 16 முறை ஏற்பட்டிருக்கிறது. அதில் 12 முறை போர்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு உலகப்போர்களும் அடக்கம். இப்பொழுது அதே நிலை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது. இந்தப்பொறியிலிருந்து இவ்வுலகம் தப்பிக்குமா என்பது தெரியவில்லை. அவ்வாறு தப்பிப்பதற்கு அடிப்படைத்தேவை இப்படி ஒரு பொறி இருக்கிறது என்று உணர்வது முக்கியம். கிரகாம் ஆலிசன் இதை அருமையாக அலசியிருக்கிறார். அவரின் பேச்சையும், எழுதிய நூலையும் கீழுள்ள சுட்டிகளில் பார்க்கவும்.